பல்லவியும் சரணமும் II - பதிவு 5
சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!
4 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா ...
2 அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு, கூடச்சொல்வது காவிரியாறு....
3. காலம் மாறினால் காதலும் மாறுமோ, மாறாது, மாறாது ...
4. மங்கல மேடையில் பொன்வண்ணம் கண்டாள் ...
5. அன்னம் போல நடை நடந்து வந்து என்னருகமர்ந்து நாணத்தோடு ...
6. பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுதோ ...
7. இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா ...
8. சின்னக்குடை போல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை...
9. காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன் ...
10. தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா ...
11. சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா...
12. அருகில் வந்ததும் உருகி நின்றதும் உறவு தந்ததும் ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************
12 மறுமொழிகள்:
1 கேள்வி பிறந்தது அன்று நல்ல பதிலும் கிடைத்தது இன்று
2-
3-அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
4- மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
5- என்னை விட்டு ஓடிப் போக முடியுமா?
6- நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்த்து
7- சிட்டுகுருவி முத்தம் கொடுத்து
8- நான் பார்த்ததிலே அவள் ஒருவளைத்தான்
9- சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
10- போனால் போகட்டும் போடா
11
12 - பூ¨’க்கு வந்த மலரே வா
பி.கு பழைய பாட்டுநா சொல்லுடுவோமல. இப்பத்து பாட்டுனா முழிப்போம்.
இப்படிக்கு,
பழைய பா(ர்)ட்டி
2 - அங்கே மாலை மயக்கம் யாருக்காக
11- யார் தருவார் இந்த அரியாசனம்
அதே பழைய பார்ட்டி தான் இங்கையும்
Bala
This too much...:) By the time I wake up at US time, and get to see your post, all songs are already identified.
All songs you listed this post are my all time favirites
Dear Anonymous,
//ஓருவர் பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!
4 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
//
Didn't you read this in my post ? Pl. follow the general rules of the game and give chance to others also, for god's sake :-(
Jeeves,
nanRi !
தேன் துளி,
I am sorry !
Next time I will post in your DAYTIME :)
enRenRum anbudan
BALA
பாலா,
முன்பே ஒருமுறை சொல்லியிருக்கிறேன், என்ககு எந்த பாட்டிலும் முதலிரண்டு வரிகளே தெரியும் என்று! அதிலும்
நீங்கள் இப்படி நடுவில் இரண்டு வரிகள் எடுத்துப் போட்டதும், பாட்டு தொண்டையில் சிக்கிக் கொண்டு வெளியே வர ம்றுக்கும். இதற்கு பயந்துக் கொண்டே, நீங்க பாட்டுப் போட்டா, அந்த பக்கம் மெதுவா வருவேன்.
இன்னைக்கு பார்த்தால் அத்தனையும் உடனே தெரிந்துவிட்டது. டகடகவென்று பேப்ப்ரில் பரிட்சைக்கு
எழுதுவதைப் போல எழுதி, பார்த்து தட்ட்ச்சு செய்து, அதுவும் வெளியே போகும் அவசரத்தில் போட்டு விட்டுப் போனேன்.திட்டு விழும் என்று தெரிந்து பெயரைப் போடாமல் போய்விட்டேன். (கணிணி புலியாய் இருந்தால் ஐபி முகவரியை கண்டுப்பிடித்து திட்டட்டும் என்ற எண்ணத்திலும்தான் :-)
பயந்துக் கொண்டே,
பழைய பார்ட்டி
Dear Anonymous,
உங்கள் நீண்ட விளக்கத்திற்கு நன்றி ! தாங்கள் "பழைய பாட்டு" expert என்பதில் சந்தேகமில்லை !!!
இனி மேல் இப்படி செய்யாமல் இருந்தால் மகிழ்ச்சி :)
இதற்கெல்லாம் யாராவது திட்டுவார்களா ? தங்கள் பெயரை இப்போது கூறுவதில் தயக்கம் ஒன்றும் இருக்காது என்று நம்புகிறேன் ;-)
என்றென்றும் அன்புடன்
பாலா
பாலா
சின்ன சஜஷன்.
கமெண்ட் மாடரேட் பண்ணும்போது சரியான விடைகளை அன்றன்றே பப்ளிஷ் பண்ணாமல், வலைப்பதிவருக்கு வாழ்த்து மட்டும் சொல்லி, ரெண்டு நாள் கழித்து விடைகளுடன் போடலாம். இல்லாட்டி முயன்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். முதல் பின்னூட்டமே பதிலுடன் இருந்ததால் அடுத்து முயலவே வாய்ப்பில்லாமல் போய்விட்டது!
உங்களுடையதில் மாடரேஷன் இல்லாவிட்டால் இத்தைகைய பதிவுகளுக்காவது மாடரேட் பண்ணலாம்
Dear Anonymous
இனி மேல் இப்படி செய்யாமல் இருந்தால் மகிழ்ச்சி
தாணு, மாடரேஷன் இல்லையா? அப்ப தப்பு என்னுது இல்லே இல்லையா?
சந்திரா, பார்க்கலாம் :-))), ஆனாலும் முதல் தடவையா இத்தனை தெரிஞ்சதும் என்னால என்னைக்
கட்டுப்படுத்த முடியவில்லை.
பாலா சார், நான் தான், நானே தான்.
உஷா
தாணு,
தங்கள் கருத்துக்கு நன்றி! மக்களின் ஆவல் குறையாமல் இருக்க அருமையான ஆலோசனை கூறி இருக்கிறீர்கள். மாடரேஷன் இருந்தது. கடந்த 2 நாட்கள் தான் இல்லை! ஆனால், உஷா இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை ;-) மறுபடி மாடரேஷனை enable செய்து விடுகிறேன்.
சந்திரவதனா,
வாங்க ! வருகைக்கு நன்றி.
உஷா,
'அனானிமஸ் நீங்கள் தான்' என்று முதலிலேயே சரியாகவே யூகித்திருந்தேன்! நீங்களாகவே ஒப்புக் கொள்வீர்கள் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை :-)
என்றென்றும் அன்புடன்
பாலா
உஷா
எனக்கும் முதல் தடவையாய் யோசிக்காமல் சட் சட் என்று பாடல் வரிகள் வர முன்னாலேயே எழுதிவிட்டீர்கள். நம் உஷா என்பதால் மன்னித்தோம்.
பாலாஜி: என்னுடைய பகல் நேரத்தீற்கு போட்டாலும் பலனில்லை. இந்த தளங்கள் என் அலுவலகத்தில் இருந்து தடை செய்யப்பட்டவை.தாணு சொன்னது சரியாக வரும் போல் இருக்கிறது
Post a Comment